திருப்பூரில் போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் டிச. 7ம் தேதி பொது ஏலம்

Tirupur News- திருப்பூரில், போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் டிசம்பர் 7ம் தேதி ஏலம் விடப்படுகிறது. (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் வீரபாண்டி, நல்லூர் மற்றும் மங்கலம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் குற்ற வழக்கில் பதிவு செய்யப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம் விடப்பட உள்ளது.
பொது இடங்களில் நிறுத்தப்பட்ட வாகனங்கள், குற்ற வழக்குகளில் பிடிபட்ட வாகனங்கள் என உரிமை கோரப்படாத வாகனங்களை அவ்வப்போது பொது ஏலத்தில், அதிகாரிகள் முன்னிலையில் விடுவது வழக்கம். அந்த வகையில் வரும் டிசம்பர் 7ம் தேதி, திருப்பூர் வீரபாண்டி, நல்லூர், மங்கலம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பிடிபட்ட வாகனங்களை ஏலம் விட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அவ்வகையில், 3 போலீஸ் ஸ்டேஷன்களை சேர்ந்த, 163 வாகனங்கள் திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் வருகிற டிசம்பர் 7-ம் தேதி காலை 11 மணிக்கு ஏலம் விடப்பட உள்ளது.ஏலம் கோர விருப்பமுள்ள நபர்கள் ஆதார் கார்டு, வைப்பு தொகை 10 ஆயிரம் ரூபாயை வங்கி வரைவோலையாக தாசில்தார் அலுவலகத்தில் வருகிற 6-ம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் மோட்டார் சைக்கிள் ஏலம் எடுக்க விரும்புவர்கள் வீரபாண்டி, நல்லூர், மங்கலம் போலீஸ் ஸ்டேஷன்களை அணுகி, ஏலத்தில் விடப்படும் வாகனங்களை பார்வையிடலாம். கூடுதல் விபரங்களுக்கு தெற்கு தாலுகா அலுவலகத்தை தொடர்பு கொண்டு அணுகலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu