தொடரும் மழை; திருப்பூர் மார்க்கெட்டில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு

தொடரும் மழை; திருப்பூர் மார்க்கெட்டில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு
X

Tirupur News - காய்கறி விலை அதிகரிப்பு (கோப்பு படம்)

Tirupur News- திருப்பூர் மாவட்ட பகுதிகளில், கனமழை தொடர்வதால் மார்க்கெட்டில் விற்கப்படும் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது.

Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் தொடரும் மழை மற்றும் வரத்து குறைவு காரணமாக திருப்பூர் மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்ந்தது. கிலோக்கு ரூ.20 வரை அதிகரித்து விட்டது.

திருப்பூர் புறநகர் பகுதிகளான பல்லடம், பொங்கலூர், அலகுமலை மற்றும் கிராம பகுதிகளில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை திருப்பூர் தென்னம்பாளையத்தில் உள்ள காய்கறி மார்கெட்டுக்கு கொண்டு வருகிறார்கள். காய்கறி வரத்து அதிகமாக இருக்கும் போது விலை குறைவாகவும், வரத்து குறைவாக இருக்கும்போது விலை அதிகமாகவும் உள்ளது. அதன்படி திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்தது. இதனால் காய்கறிகள் வரத்து குறைந்து விட்டது. வரத்து குறைவு காரணமாக விலை அதிகமாக காணப்பட்டது.

நேற்று விற்பனை செய்யப்பட்ட காய்கறிகள் விலை வருமாறு: (கிலோ)

ரூ.60-க்கு விற்கப்பட்ட அவரை சாதா ரூ.80-க்கும், ரூ.80-க்கு விற்கப்பட்ட பட்ட அவரை ரூ.120-க்கும், ரூ.80-க்கு விற்கப்பட்ட , நாட்டு அவரை ரூ.120-க்கும் விற்னையானது.

ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட வெண்டைக்காய் ரூ.80-க்கும், ரூ.40-க்கு விற்பனையான வரிகத்தரிக்காய் ரூ.60-க்கும், ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்ட பவானி கத்தரிக்காய் ரூ.80-க்கும், ரூ.100-க்கு விற்பனை பெய்யப்பட்ட பீன்ஸ் ரூ.120-க்கும், கேரட் ரூ.60-க்கும், சின்ன வெங்கயாம் ரூ.100-க்கும், பெரிய வெங்காயம் ரூ.40-க்கும் சாதா உருளை ரூ.30-க்கும், ஊட்டு உருளை ரூ.60-க்கும் விற்பனையானது.

மேலும் ரூ.40-க்கு விற்பனையான புடலை ரூ.60-க்கும், ரூ.60-க்குவிற்பனை செய்யப்பட்ட பீர்க்கன்காய் ரூ.80-க்கும், ரூ.50-க்கு விற்பனையான பீட்ரூட் ரூ.70-க்கும், ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை கோஸ் ரூ.30-க்கும், ரூ. 60-க்கு விற்பனையான பாகற்காய் ரூ.80-க்கும், ரூ.100-க்கு விற்பனையான புது இஞ்சி ரூ.130-க்கும், ரூ.60-க்கு விற்பனையான முருங்கை ரூ.100-க்கும், சவ்சவ் ரூ.30-க்கும், பச்சை மிளகாய் ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளகோவில்

வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை செயல்படுகிறது, வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதை பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.

நேற்று வார சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.20, கத்தரிக்காய் ரூ.60, பீர்க்கங்காய் ரூ.60. பெரிய வெங்காயம் ரூ.30 , சின்ன வெங்காயம் ரூ. 100. உருளைக்கிழங்கு ரூ.30, பீட்ரூட் ரூ.40, புடலை காய் ரூ.40, முட்டை கோஸ் ரூ.40, பீன்ஸ் ரூ.100, கேரட் ரூ.60, பாவற்காய் ரூ.60,வெண்டைக்காய் ரூ.60, இஞ்சி ரூ.150, அவரைக்காய் ரூ.80, நேரோ காய் ரூ. 40, கோவக்காய் ரூ.40, முள்ளங்கி ரூ. 40, பச்சை மிளகாய் ரூ.55,சுரக்காய் ரூ.10க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Tags

Next Story