திருப்பூரில் வாஜ்பாய் பிறந்தநாள்: இனிப்பு வழங்கி பாஜகவினர் கொண்டாட்டம்

திருப்பூரில் வாஜ்பாய் பிறந்தநாள்: இனிப்பு வழங்கி பாஜகவினர் கொண்டாட்டம்
X

வாஜ்பாய் திருவுருவப் படத்திற்கு மரியாதை செய்த பாஜகவினர். 

திருப்பூரின் பல்வேறு பகுதிகளில், வாஜ்பாய் பிறந்தநாளை, இனிப்பு வழங்கி பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்ததினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதை, நல்லாட்சி தினமாக அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். இதை முன்னிட்டு திருப்பூர், அவினாசி, பல்லடம், வீரபாண்டி பகுதி பாஜக கிளை நிர்வாகிகள், வாஜ்பாய் திருவுருவப் படத்திற்கு மரியாதை செய்து வணங்கினர்.


அவினாசி புதுப்பாளையம், வஞ்சிபாளையம், தெக்கலூர், எம்.எஸ். நகர், திருநீலகண்டபுரம், வீரபாண்டி, ரங்கே கவுண்டன் பாளையம், கோவில் வழி, புதுரோடு, பலவஞ்சிபாளையம், புளியங்காடு, அமராவதிபாளையம், ஆண்டிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், பாஜகவினர் இனிப்புகளை வழங்கி, வாஜ்பாய் பிறந்தநாளை கொண்டாடினர்.

மேலும் திருப்பூர் பகுதி செய்திகளை அறிய: https://www.instanews.city/tamil-nadu/திருப்பூர் ; WhatsApp: https://www.watsapp.news/AN

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!