'நார் கழிவிலும் காசு பார்க்கலாம்' விவசாயிகளுக்கு பயிற்சி
பைல் படம்.
உடுமலை அருகேயுள்ள கிணத்துக்கடவு, வட்டார 'அட்மா' திட்டம் சார்பில், மெட்டுவாவி கிராம விவசாயிகளுக்கு, தென்னை நார் கழிவு தயாரிப்பு குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.
தென்னை நார் கழிவு பயிற்சியில், தென்னை நார்க்கழிவை சந்தைப்படுத்துவது குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன. பயிற்சிக்கு, கிணத்துக்கடவு வட்டார வேளாண் உதவி இயக்குனர் அனந்தகுமார், தலைமை வகித்தார். 'அட்மா' மேலாளர் பிரியங்கா வரவேற்று பேசினார். வேளாண் மற்றும் உழவர் நலத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து, துணை வேளாண் அலுவலர் மோகனசுந்தரம் விளக்கினார்.
ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் பேராசிரியர் பிரனிதா பங்கேற்று, 'தென்னை நார் கழிவின் முக்கியத்துவம், நார் கழிவு தயாரிப்பு முறை, பயன்பாடு மற்றும் சந்தைப்படுத்துதல்' குறித்து விளக்கினார். விவசாயிகளின் பல்வேறு சந்தேகங்களுக்கு, விளக்கம் அளிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu