திருமூர்த்தி அணை நீர் திறக்கப்படுவது எப்போது? - 4ம் பாசனத்துக்காக காத்திருக்கும் விவசாயிகள்

திருமூர்த்தி அணை நீர் திறக்கப்படுவது எப்போது? - 4ம் பாசனத்துக்காக காத்திருக்கும் விவசாயிகள்
X

Tirupur News,Tirupur News Today- திருமூர்த்தி அணை (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- திருமூர்த்தி அணையில், நீர் திறக்கப்படும் நாளை எதிர்நோக்கி, பாசன விவசாயிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Tirupur News,Tirupur News Today- உடுமலை அடுத்த திருமூர்த்தி அணையின் மூலமாக பிஏபி பாசனத் திட்டத்தின் கீழ் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகிற ஆறுகள்,ஓடைகள் நீர்வரத்தை அளித்து வருகிறது.அதைத் தவிர பிஏபி தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலமாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. பிஏபி திட்டம் இன்றளவும் நடைமுறையில் இருப்பதற்கு அடர்ந்த வனப்பகுதி வழியாக அமைக்கப்பட்டுள்ள காண்டூர் கால்வாயின் பங்கு முக்கியமானதாகும்.

ஆண்டுக்கு 10 மாதங்கள் நீர்வரத்து இருக்கும் வகையில் அமைக்கப்பட்ட இந்த கால்வாயானது மழைக்காலங்களில் ஏற்படுகிற நீர்வரத்தின் போது மண் மற்றும் பாறைகளால் சேதமடைந்து வந்தது.இதனால் நீர் இழப்பு ஏற்பட்டு வந்ததால் அணை நிரம்புவதிலும் தாமதம் நிலவி வந்தது. இதன் காரணமாக பாசனத்திற்கு தண்ணீர் வழங்குவதிலும் தடங்கல் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து கால்வாயை புதுப்பிக்க கோரி விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து காண்டூர் கால்வாயை சீரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த சூழலில் பணிகள் தொடங்கப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக மும்முரமாக நடந்து வருகிறது. பணிகளை விரைந்து முடிப்பதற்கு ஏதுவாக மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் தடையில்லாமல் தீவிரமாக நடந்து வருகிறது.

இதற்கிடையில் கல்குவாரிகள் வேலை நிறுத்தம் மழைப்பொழிவு உள்ளிட்ட காரணங்கள் கால்வாய் சீரமைப்பு பணியில் சற்று தொய்வு ஏற்பட்டது. ஆனாலும் இருப்பில் உள்ள மூலப்பொருட்களைக் கொண்டு பணிகள் மெதுவாக நடந்து வந்தது.

இந்நிலையில் மழைப்பொழிவு நின்று விட்டதுடன் கல்குவாரி வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதால் பணிகள் மீண்டும் தீவிரம் அடைந்து உள்ளது. ஆகஸ்ட் மாத இறுதிக்குள் கால்வாய் பணியை முடித்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பாசனப்பரப்புகளில் தென்மேற்கு பருவமழை தீவிர அடையாததால், தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் விவசாயிகள் 4-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் நாளை எதிர்நோக்கி உள்ளனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!