கண்காணிப்பு இல்லாததால் அமராவதி அணையில் சுற்றுலா பயணிகள் அத்துமீறல்
கோப்பு படம்
திருப்பூர் மாவடம், உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை, பாசன ஆதாரமாகவும், சுற்றுலாத்தலமாகவும் உள்ளது. அணை பூங்கா, முதலைப்பண்ணையை பார்க்க பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அணையில் அத்துமீறி, சுற்றுலாப்பயணிகள் குளிப்பது அதிகரித்துள்ளது. நீர்தேக்கத்தில், குளிப்பதற்கு தடைவிதித்து, , பொதுப்பணித்துறையினர், அதற்கான எச்சரிக்கை பலகையையும் வைத்துள்ளனர்.
அணையில், முதலைகள் நடமாட்டமும் உள்ளது. இந்த விபரீதம் தெரியாமல், சுற்றுலாப்பயணிகள் அத்துமீறி குளிக்கின்றனர். படகு சவாரிக்காக அமைக்கப்பட்ட படித்துறையை ஒட்டி, ஆழமான பகுதியில், குளிக்கின்றனர். இதனால், அவ்வப்போது உயிர்ப்பலி உண்டாகிறது. பொதுப்பணித்துறையினர் கண்காணித்து, அத்துமீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உயிரிழப்புகளை தடுக்க முடியும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu