உடுமலையில் ஜூலை மாத காய்கறி விற்பனை ரூ. 1.71 கோடி

உடுமலையில் ஜூலை மாத காய்கறி விற்பனை ரூ. 1.71 கோடி
X

உடுமலை உழவர் சந்தையில், கடந்த ஜூலை மாதத்தில் ரூ.1 கோடியே 71 லட்சத்திற்கு, காய்கறிகள் விற்பனையானது.

உடுமலை உழவர் சந்தையில், கடந்த ஜூலை மாதத்தில் ரூ.1 கோடியே 71 லட்சத்திற்கு, காய்கறிகள் விற்பனையானது.

அரசு வேளாண் விற்பனைத்துறையின் சார்பில் உடுமலை கபூர்கான் வீதியில் உள்ள உழவர்சந்தைக்கு உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுாகாக்களில் உள்ள விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளையும் காய்கறிகளை அதிகாலை முதல் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

உடுமலை உழவர் சந்தையில் கடந்த ஜுலை மாதம், 2,066விவசாயிகள், மொத்தம் 7லட்சத்து 70ஆயிரத்து 25கிலோ காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இந்த காய்கறிகள் மொத்தம் ரூ.1கோடியே, 71லட்சத்து 58ஆயிரத்து 560-க்கு விற்பனை ஆனது. காய்கறிகளை பொதுமக்கள் 85ஆயிரத்து 496பேர் வாங்கி சென்றனர்

கடந்த ஜூன் மாதத்துடன், ஜூலை மாதத்தை ஒப்பிடும்போது உடுமலை உழவர் சந்தைக்கு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்த விவசாயிகள் எண்ணிக்கை 234 பேர் அதிகம். காய்கறிகள் வரத்து 1 லட்சத்து 70 ஆயிரத்து 215 கிலோ அதிகமாக இருந்தது. அதனால் காய்கறிகளின் மொத்த விற்பனை தொகை ரூ.8 லட்சத்து 12 ஆயிரத்து 340 கூடுதலானது. காய்கறிகளை வாங்க, கடந்த ஜூன் மாதத்தை விட ஜூலை மாதம், பொதுமக்கள் 17 ஆயிரத்து 130 பேர் கூடுதலாக வந்துள்ளனர்.

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!