மழையால் மக்கள் மகிழ்ச்சி

மழையால் மக்கள் மகிழ்ச்சி
X
உடுமலைப்பேட்டை

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சுற்று வட்டாரத்தில் நேற்று மாலை திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சுற்று வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வந்தது. குறிப்பாக அக்னி வெயில் துவங்கிய பிறகு வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டது. வெயில் காரணமாக மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை திடீரென மழை பெய்ய துவங்கியது. பூமி குளிரும் அளவுக்கு மழை பெய்ததால், கடுமையான வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் உடுமலைப்பேட்டை சுற்று வட்டார பகுதி விவசாய பயிர்கள் காய்ந்து கிடந்தது. இந்த மழையால் பயிர்களுக்கு புத்துயிர் கிடைக்கும் என்பதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!