உடுமலை; பாலப்பம்பட்டி, இச்சிப்பட்டியில் நாளை மின்தடை
Tirupur News- பாலப்பம்பட்டி மற்றும் இச்சிப்பட்டியில் நாளை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது. (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- உடுமலையை அடுத்துள்ள பாலப்பம்பட்டியில் நாளை பராமரிப்பு பணிகளுக்காக, மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக உடுமலை இயக்குதலும் பேணுதலும் செயற்பொறியாளர் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பாலப்பம்பட்டி துணை மின் நிலைய பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் தடை செய்யப்படுகிறது.
மின்தடை பகுதிகள்; காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
உடுமலை காந்திநகர், அண்ணா குடியிருப்பு, நேரு வீதி, நகராட்சி அலுவலகம், பார்க், ரயில்வே ஸ்டேஷன், போலீஸ் குடியிருப்பு, சந்தை, எஸ்.வி. புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கண்ணம்மநாயக்கனூர், குரல்குட்டை, மடத்தூர், மலையாண்டிபட்டினம், மருள்பட்டி, உரல்பட்டி, சாளரப்பட்டி, பாப்பான்குளம், சாமராயபட்டி, பெருமாள்புதூர், குமரலிங்கம், கொழுமம், ருத்ராபாளையம் மற்றும் வீரசோழபுரம் ஆகிய பகுதியில் மின்வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
இச்சிப்பட்டியில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோம் தடை செய்யப்பட்டுகிறது.
இச்சிப்பட்டி துணை மின் நிலையம்
மின்தடை பகுதிகள்; காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
இச்சிப்பட்டி, சின்ன அய்யன் கோவில், பெருமாகவுண்டன்பாளையம் பிரிவு, தேவராயன்பாளையம், கோம்பக்காடு, கோம்பக்காடுபுதூர், கள்ளப்பாளையம், கருகம்பாளையம், பெத்தாம்பூச்சிபாளையம், செந்தேவிபாளையம், குமாரபாளையம், கொத்துமுட்டிபாளையம், கோடாங்கிபாளையம், சின்ன கோடாங்கிபாளையம் மற்றும் சாமளாபுரம் பகுதியில் உள்ள சூர்யா நகர், ராம்நகர் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது, என மின்வாரிய செயற்பொறியாளர் சபரிராஜன் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu