உடுமலை நாராயணகவி 40 வது நினைவு தினம்
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை அடுத்த பூளவாடி கிராமத்தில் 1899 ம் ஆண்டு பிறந்து தனது பகுத்தறிவு கொள்கையால் திரைப்படப்பாடல்கள் மூலம் தமிழகம் முழுவதும் திராவிட இயக்கக்களின் பிரச்சார பீரங்கியாக செயல்பட்டவர் நாராயண கவி. அவருக்கு, கலைமாமணி விருது வழங்கியும், உடுமலையில் மணி மண்டபம் அமைத்தார் முன்னாள் முதல்வர் கருணாநிதி.
உடுமலையில் உள்ள மணிமண்டபத்தில் நாராயணகவி ராயரின் 40 வது நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. மகன் வழி பேரன் வழக்கறிஞர் சுந்தரராஜன், திருவுருவச் சிலை்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். உலக திருக்குறள் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட தலைவர் தென்றல் சேகர், செயலாளர் கொழுமம் ஆதி உள்பட பலர் கலந்து கொண்டனர். கொரோனா காரணமாக நடப்பாண்டு அரசு சார்பில் நடைபெறும் விழா ரத்து செய்யப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu