உடுமலை நகராட்சி தலைவர் பதவி தி.மு.க. வசமானது

உடுமலை நகராட்சி தலைவர் பதவி  தி.மு.க. வசமானது
X

 மத்தீன்

உடுமலை நகராட்சி தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது.

உடுமலை நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 23, அ.தி.மு.க. 4, சுயேட்சைகள் 4, காங்கிரஸ், ம.தி.மு.க., தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றிருந்தன. நகராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க. சார்பில் ஜெயக்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் ஜெயக்குமார் மற்றும் உடுமலை நகர தி.மு.க. செயலாளர் மத்தீன் போட்டியிட்டனர். இதையடுத்து தேர்தல் நடைபெற்றது. இதில் மத்தீன் 25 வாக்குகள் பெற்று நகராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ஜெயக்குமார் 8 வாக்குகள் பெற்றிருந்தார்.

Tags

Next Story