தாக்குதலுக்கு கண்டனம்: உடுமலையில் வழக்கறிஞர்கள் சாலை மறியல்

தாக்குதலுக்கு கண்டனம்: உடுமலையில் வழக்கறிஞர்கள் சாலை மறியல்
X

வழக்கறிஞரை தாக்கியவர் மீது நடவடிக்கை கோரி, உடுமலையில், திண்டுக்கல் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்.

வழக்கறிஞரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, உடுமலையில் வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த பார்த்தசாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் சென்னியப்பன், வழக்கறிஞர். இவரை அதே பகுதியை சேர்ந்த 5 பேர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சென்னியப்பன், உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து குமரலிங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இந்நிலையில், வழக்கறிஞர் சென்னியப்பன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகவும், வழக்கறிஞரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், கோவை - திண்டுக்கல் ரோட்டில், வழக்கறிஞர்கள் இன்று, திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், வழக்கறிஞர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து, சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு வழக்கறிஞர்கள் கலைந்து சென்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி