உடுமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவர் பேரவைத் தேர்தல்

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவர் பேரவைத் தேர்தல்
X

Tirupur News,Tirupur News Today- உடுமலை அரசு கல்லூரியில், மாணவர் பேரவைத் தேர்தல் நடத்தப்பட்டது. (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- உடுமலை அரசு கலைக் கல்லூரியில் நடப்பாண்டுக்கான மாணவர் பேரவைத் தேர்தலில், நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Tirupur News,Tirupur News Today- உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2023-2024-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் பேரவைத் தேர்தல் நடத்தப்பட்டு, நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் கல்யாணி கூறியதாவது,

இளநிலை 3-ம் ஆண்டு மாணவ-மாணவிகளின் சார்பில் துறைச் செயலாளர் பதவிக்கான போட்டியும், இளநிலை 2- ம் ஆண்டு மாணவ-மாணவிகளின் சார்பில் துறை இணைச் செயலாளர் பதவிக்கான போட்டியும் நடந்தது. துறைச் செயலாளருக்கான தேர்தலில் ஒவ்வொரு துறையைச் சேர்ந்த இளநிலை 3-ம் ஆண்டு மாணவ-மாணவிகள் வாக்களித்து தங்களுக்கான செயலாளரை தேர்வு செய்தனர். துறையின் இணைச் செயலாளருக்கான தேர்தலில் போட்டியிட்டவர்களை ஒவ்வொரு துறையைச் சேர்ந்த இளநிலை 2-ம் ஆண்டு மாணவ-மாணவிகள் வாக்களித்து தேர்வு செய்தனர்.

பிற்பகலில் கல்லூரியின் மாணவர் பேரவைக்கான தலைவர், துணைத் தலைவர் மற்றும் செயலாளருக்கான போட்டி நடந்தது. இளநிலை 3-ம் ஆண்டு மாணவர்களின் சார்பாக, துறைவாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட துறைச்செயலாளர்கள் கல்லூரியின் மாணவர் பேரவைத் தலைவர் மற்றும் துணைத்தலைவரை தேர்வு செய்தனர்.

இளநிலை 2-ம் ஆண்டு மாணவர்களின் சார்பாக துறைவாரியாகத் தேர்ந்து எடுக்கப்பட்ட இணைச் செயலாளர்கள் கல்லூரியின் மாணவர் பேரவைக்கான செயலாளர் மற்றும் மகளிர் செயலாளரை தேர்ந்து எடுத்தனர்.

அதன்படி மாணவர் பேரவைத் தலைவராக யுவராஜ், துணைத்தலைவராக முகமது ஜூனைத் ரஸ்வி, செயலாளராக கோகுல்நாத், மகளிர் செயலாளராக தீபிகா தேர்வு செய்யப்பட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவர் பேரவைக்கான தேர்தலில் கல்லூரியின் கணிதவியல் துறைத்தலைவர் பேராசிரியர் பொன்முடி தேர்தல் நடத்தும் அலுவலராக செயல்பட்டார். தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!