உடுமலையில் மேம்பாலத்தில் இருந்து விழுந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் பலி!

உடுமலையில் மேம்பாலத்தில்   இருந்து விழுந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் பலி!
X
உடுமலையில் மேம்பாலத்தில் இருந்து விழுந்தவர் பலி

திருப்பூர் மாவட்டம் உடுமலை கோமதி நகரை சேர்ந்தவர்முத்துசாமி ( வயது 63) திருமணமாகாதவர். சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர். கோவிலில் பாட்டுப்பாடி, பக்தர்கள் தரும் பணத்தை வைத்து வாழ்ந்து வந்தார். ஊரடங்கு காரணமாக வருமானமின்றி தவித்து வந்தார்.

இந்நிலையில் தளிரோடு ரயில்வே மேம்பாலத்தில் நடந்து சென்றபோது, பாலத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு உடுமலை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவரை பரிசோதித்த டாக்டர், வரும் வழியில் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தவறி விழுந்து பலியானாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!