அந்த நாள் ஞாபகம்… நெகிழ்ந்த உடுமலை கல்லூரி முன்னாள் மாணவர்கள்

அந்த நாள் ஞாபகம்… நெகிழ்ந்த உடுமலை கல்லூரி  முன்னாள் மாணவர்கள்
X
உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், 45 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவர்கள், நெகிழ்ச்சியுடன் சந்தித்து கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், 1977ம் ஆண்டு, பி.காம்., பாடத்தில், அதிகப்படியான மாணவர்கள் படித்தனர். தங்களுடன் படித்தவர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆவலில், சில நண்பர்கள், முன்னாள் மாணவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தனர்.

அவ்வகையில், உடுமலை அரசு கலை கல்லுாரி வளாகத்தில் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், 25 பேர் பங்கேற்றனர். வக்கீல் ராஜேந்திரன், தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி., காஜாமைதீன் முன்னிலை வகித்தார். முன்னதாக, கனகராஜன், வரவேற்று பேசினார். கோபால், சண்முகம், கண்ணப்பன், ஜெயமாணிக்கம், முத்துவேல் முருகன் ஆகியோர் விழாவைத் துவக்கி வைத்தனர்.

தொடர்ந்து, தங்களுடன் படித்து, மறைந்த நண்பர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். கல்லுாரி முதல்வர் கல்யாணி, முன்னாள் மாணவர்களை வாழ்த்தி பேசினார். முன்னாள் மாணவர்கள் அனைவரும் தங்களுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து மகிழ்ச்சியடைந்தனர். தியாகராஜன் நன்றி கூறினார்.

Tags

Next Story