அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்தது காட்டாறு வெள்ளம்

அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்தது காட்டாறு வெள்ளம்
X

உடுமலை அமணலிங்கேஸ்வரர் கோவில், காட்டாற்று வெள்ளத்தால் சூழப்பட்டது .

உடுமலையில் உள்ள பிரசித்த பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில், காட்டாற்று வெள்ளத்தால் சூழப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், உடுமலையில் உள்ள திருமூர்த்தி மலை, பஞ்சலிங்க அருவியில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளான குழிப்பட்டி, குருமலை, ஜல்லி முத்தான் பாறை உள்ளிட்ட பல இடங்களில், இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இதனால், பஞ்சலிங்க அருவியில், காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. அமணலிங்கேஸ்வரர் கோவிலை, வெள்ளம் சூழ்ந்தது.

இதனால், காலையில் நடைபெற இருந்த பூஜைகள் நிறுத்தப்பட்டன. தொடர்ந்து மழை பெய்து வருவதால், வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளி தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. பயணிகள் பாதுகாப்பாக இருக்கும் படி, ஒலிபெருக்கி மூலம், காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?