காலில் அடிபட்ட சிறுத்தைக்கு சிகிச்சை

காலில் அடிபட்ட சிறுத்தைக்கு சிகிச்சை

சிறுத்தைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

காலில் அடிப்பட்டு அவதிப்பட்ட சிறுத்தைக்கு வனத்துறையினர் சிகிச்சையளித்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரகம், பண்ணபட்டி கோம்பை அடர் வனப்பகுதியில், பின்னங்காலில் அடிப்பட்ட நிலையில் 5 வயதுடைய ஆண் சிறுத்தை, வன எல்லை பகுதியில் சுற்றி வந்துள்ளது. நடக்க முடியாமலும், வேட்டையாட முடியாமல், சிரமப்பட்ட இச்சிறுத்தைக்கு சிகிச்சையளிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.

உடுமலை வனச்சரகத்திலுள்ள சிறப்பு வேட்டை தடுப்பு குழு மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனத்துறையை சேர்ந்த கால்நடை டாக்டர் சதாசிவம், முதுமலை புலிகள் காப்பக டாக்டர் ராஜேஸ் குமார் ஆகியோரை கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டு, வன எல்லையில் சுற்றி வந்த இச்சிறுத்தையை, மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். உடுமலை அருகேயுள்ள அமராவதி வனச்சரக பகுதியில், வன ஓய்வு விடுதியில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Tags

Next Story