உடுமலையில் ஊரடங்கை பயன்படுத்தி பொருட்கள் விலை உயர்வு; பொதுமக்கள் வேதனை
மாதிரி படம்
கொரோனாவை கட்டுப்படுத்த நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது இதனால் இன்று இரவு 9 மணி வரை கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளது. முழு ஊடரங்கு என்பதால் இன்று பொது மக்கள் காய்கறி வாங்க அதிகம் குவிந்தனர்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட வியாபாரிகள், விலைகளை அதிகம் உயர்த்தி விற்பனை செய்தனர். உடுமலைப்பேட்டை ராஜேந்திரன் ரோட்டில் பொருட்கள் வாங்க பொது மக்கள் குவிந்தனர். ரூ. 750 முதல் 850 வரை விற்கப்பட்ட ஆட்டிறைச்சி ரூ.1000 வரையும், ரூ.180 க்கு விற்கப்பட்ட கறிக்கோழி ரூ. 210 வரையும், ரூ. 10 க்கு விற்கப்பட்ட தக்காளி ரூ. 50 க்கும், ரூ. 15 முதல் 20 வரை விற்கப்பட்ட பெரிய வெங்காயம் ரூ. 50 வரையும், ரூ. 40 முதல் 50 வரை விற்கப்பட்ட சின்ன வெங்காயம் ரூ. 80 க்கும் விற்கப்பட்டது.
கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி இறைச்சி, காய்கறி விலைகளை பல மடங்கு உயர்த்தி விற்பனை செய்தது பொது மக்களிடம் வேதனையை அளித்து உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu