யானைகளை தொந்தரவு செய்யும் சுற்றுலா பயணிகள்; வனத்துறை எச்சரிக்கை

யானைகளை தொந்தரவு செய்யும் சுற்றுலா பயணிகள்; வனத்துறை எச்சரிக்கை
X

Tirupur News,Tirupur News Today- மூணாறு சாலையில் செல்லும் யானைகளை தொந்தரவு செய்தால் அபராதம், கைது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, உடுமலை வனத்துறை எச்சரித்துள்ளது. (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- உடுமலை - மூணாறு சாலையில் செல்லும் யானைகளை தொந்தரவு செய்யும் சுற்றுலா பயணிகளை, வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Tirupur News,Tirupur News Today- உடுமலையில் இருந்து 20 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள தமிழக-கேரள எல்லையில், ஆனைமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இங்குள்ள வனச் சரகங்களில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் உள்ளன. இங்கு கடந்தாண்டு வனத்துறை சாா்பில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 300-க்கும் மேற்பட்ட யானைகள் இருப்பது தெரியவந்தது.

தற்போது வனப் பகுதியில் நிலவும் வறட்சியால் குடிநீருக்காக காலை, மாலை நேரங்களில் உடுமலை - மூணாறு சாலையைக் கடந்து அமராவதி அணைக்கு தண்ணீர் குடிக்க யானைகள் செல்கின்றன. இந்நிலையில், அமராவதி வனச்சரகம் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், சாலையை கடந்து செல்லும் யானைகள் மீது கற்களை வீசுவது, செல்பி எடுக்க முயல்வது உள்ளிட்ட தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதேபோல, புகைப்படம் எடுப்பதற்காக அருகில் சென்று யானைகளை தொந்தரவு செய்கின்றனா். இதனால் கோபம் அடையும் யானைகள் சுற்றுலாப் பயணிகளை துரத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிலையில் யானைகளை தொந்தரவு செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினா் எச்சரித்துள்ளனா்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது,

உடுமலை - மூணாறு சாலையில் செல்லும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை விட்டு இறங்கி யானைகளை தொந்தரவு செய்யும் சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகின்றன. இதுதொடா்பாக தொடா்ந்து சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதையும் மீறி தகாத செயல்களில் ஈடுபடுபவா்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும், எல்லை மீறுபவா்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பொதுவாக வனப்பகுதிகளில் காணப்படும் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள், அமைதியாக காணப்படும். அதன் வழித்தடங்களில் செல்லும். பொதுமக்களுக்கு பெரும்பாலும் இடையூறு செய்யாது. ஆனால், அவ்வழித்தடங்களில் செல்லும் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் யானைகள் அருகில் செல்லும் போது வாகனங்களில் உள்ள ஹாரன்களை அதிக நேரம் ஒலிக்க விடுவது, காலி பாட்டில்களை யானைகளை நோக்கி வீசுவது, அருகில் சென்று ‘செல்பி’ எடுப்பது என, தேவையற்ற செயல்களில் ஈடுபட்டு யானைகளை மிரட்சியடையச் செய்கின்றனர்.

யானைகளின் கவனத்தை திசை திருப்புகின்றனர். அவர்களின் செயல்களால் அச்சமடைவதால் மட்டுமே, தங்களை பாதுகாத்துக் கொள்ள யானைகள் அவர்களை தாக்க வருகின்றன. இதை பலரும் உணராமல், யானைகளிடம் வம்பு செய்வதால் அவர்களுக்கு அபராதம் விதிப்பது, கைது நடவடிக்கை எடுப்பது என்ற முடிவுக்கு, வனத்துறை அதிகாரிகள் வந்துள்ளனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!