திருப்பூர் மாவட்டத்தில் தக்காளி விலை திடீர் சரிவு ரோட்டில் வீசிச்சென்ற விவசாயிகள்....

திருப்பூர் மாவட்டத்தில் தக்காளி விலை திடீர் சரிவு  ரோட்டில் வீசிச்சென்ற விவசாயிகள்....
X

தங்கம் போல்  விலையேற்றத்துடன் காணப்பட்ட தக்காளி இன்று விலை சரிந்து போனதால் கேட்பதற்கு ஆள் இல்லாமல் போயிற்று.

Tomato Rate Down Farmers Upset திருப்பூர் மாவட்டத்தில் தக்காளி விலை திடீரென சரிவடைந்ததால் விவசாயிகள் கவலைக்குள்ளாகி ரோட்டில் வீசி சென்ற அவலம் நடந்தது.

Tomato Rate Down Farmers Upset

தமிழகத்தில் தக்காளியின் விலையானது சாகுபடிக்கு தகுந்தாற்போல் விலையில் ஏற்ற இறக்கமாகி வருகிறது. வரத்து அதிகமாகும்போது விலை சரிவும், வரத்து குறையும் போது விலை உயர்வும் அதிகரிப்பது வழக்கமாகி வருகிறது. இந்நிலையில் அதிக வரத்தின் காரணமாக திருப்பூர் மாவட்ட பகுதிகளில் விலையானது கடும் சரிவினைச் சந்தித்துள்ளது. சில மாதங்களுக்கு முன் தங்கத்தின் விலையைப் போல் ஏறிக்கொண்டே சென்ற தக்காளியின் விலை இன்று படு பாதாளத்திற்கு வீழ்ச்சியடைநததால் பெரும்விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

Tomato Rate Down Farmers Upset



திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை கடும் சரிவை சந்தித்துள்ளது 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூபாய் 80க்கு விற்பனையாகி வருகிறது.

இதனால் விவசாயிகளுக்கு ஆள் கூலிக்கு கூட விலை கிடைக்காமல் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது இதனால் உடுமலை பழனி ரோட்டோரங்களில் ஆங்காங்கே தக்காளியை கொட்டிச்செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தக்காளியைப் பொறுத்தவரை அதிக நாள் வாங்கி ஸ்டாக் வைக்க முடியாது. எனவே வியாபாரிகளும் பொதுமக்களும் இதனை அதிக அளவில் வாங்க தயங்குகின்றனர். அதேபோல் விலை குறைந்தாலும் அள்ளிக்கொண்டு வந்துவிட முடியாது. எல்லாமே சில காலந்தான் என்ற அளவிற்குதான் வாங்க முடியும். எனவே தக்காளியானது விலை அதிகமானாலும் பிரச்னையே...குறைந்தாலும் பிரச்னையே. என்ன செய்வது என்று சாகுபடி செய்த விவசாயிகள் ரோட்டில் கொட்டிச் செல்லும் அவல நிலைதான் ....

Tomato Rate Down Farmers Upset


விலை கேட்பதற்கு ஆள் இல்லாது போனதால் ரோட்டோரம் வீசிச்சென்ற தக்காளி....(கோப்பு படம்)

இதுகுறித்து விவசாயிகள் சிலர் கூறுகையில் உடுமலையில் தக்காளி சந்தை உருவாக்கி இருப்பு வைக்கவும் உரிய விலை கிடைக்க குளிர்சாதன கிடங்கு அமைத்து மற்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கவும் மதிப்பு கூட்டுப் பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்என கோரிக்கை விடுத்துள்ளனர் .

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!