உடுமலை; பஞ்சலிங்க அருவியில் போதிய அடிப்படை வசதிகளை் நிறைவேற்றப்படுமா?

உடுமலை; பஞ்சலிங்க அருவியில் போதிய அடிப்படை வசதிகளை் நிறைவேற்றப்படுமா?
X

Tirupur News. Tirupur News Today- பஞ்சலிங்க அருவி (கோப்பு படம்)

Tirupur News. Tirupur News Today- ஏராளமான மக்கள் வந்து செல்லும் உடுமலையை அடுத்துள்ள பஞ்சலிங்க அருவியில் போதிய அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Tirupur News. Tirupur News Today- திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே திருமூர்த்திமலை பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக உள்ளது. இம்மலை மேல் வனப்பகுதியில் அமைந்துள்ள பஞ்சலிங்க அருவி பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு இந்து அறநிலையத் துறையின் கீழ் அமணலிங்கேஸ்வரர் கோவில் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படுகிறது.

ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் பஞ்சலிங்க அருவியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை.கழிப்பிடம், பெண்களுக்கான உடை மாற்றும் அறை மற்றும் அடிவாரத்தில் வாகனங்களை நிறுத்த இடவசதி இல்லாமல் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கடந்த 2008ல் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி 13 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.அப்போதைய தி.மு.க., அரசு சார்பில் அரசுத் துறைகளை ஒருங்கிணைத்து மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள உறுதியளிக்கப்பட்டது. பஞ்சலிங்க அருவி மற்றும் அடிவாரத்திலுள்ள கோவிலைச்சுற்றிலும் 50 ஏக்கர் நிலத்தை இந்து அறநிலையத் துறைக்கு ஒப்படைக்கவும் கோரிக்கை எழுந்தது. ஆனால் இத்திட்டம் செயல்பாட்டுக்கு இன்னும் வரவில்லை.

கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், திருமூர்த்திமலை மற்றும் பஞ்சலிங்க அருவி பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த போதிய இடமில்லை. பல முறை கருத்துரு அனுப்பியும், வனத்துறை அனுமதி கிடைக்கவில்லை. இதனால் பல்வேறு திட்ட பணிகள் முடங்கியுள்ளது என்றனர்.

தமிழக அரசு வனத்துறை இடத்தை இந்து அறநிலையத் துறைக்கு ஒதுக்கீடு செய்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது. கோடை காலம் மட்டுமின்றி, ஆண்டின் முக்கிய நாட்கள், விடுமுறை நாட்களில் மக்கள் அதிகளவில் வந்து செல்லும் முக்கிய சுற்றுலா தலமாக, பஞ்சலிங்க அருவி உள்ளது. எனவே, இனியும் தாமதிக்காமல் போதிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா