உடுமலை; காட்டுப்பன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க, விவசாயிகள் வலியுறுத்தல்
tirupur News, tirupur News today- காட்டுப்பன்றிகளை, வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க, உடுமலை வட்டார விவசாயிகள் வலியுறுத்தல். (கோப்பு படம்)
tirupur News, tirupur News today- .உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில், அனைத்து பகுதிகளிலும் காட்டுப்பன்றிகளால் நாள்தோறும் பல்வேறு பிரச்னைகளை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். வன எல்லை மட்டுமல்லாது, வெகு தொலைவிலுள்ள கிராமங்களிலும் காட்டுப்பன்றிகள் பெருக்கம் அதிகரித்துள்ளது.
நிலக்கடலை, மக்காச்சோளம், சோளம், மா, தென்னை மற்றும் காய்கறி சாகுபடியிலும், காட்டுப்பன்றிகள் தொடர் சேதம் ஏற்படுத்தி வருகின்றன. எண்ணிக்கை அதிகரிப்பால், விவசாயிகளும் காட்டுப்பன்றிகள் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் விளைநிலங்களுக்கும், கிராம இணைப்பு ரோடுகளில் செல்லவும் விவசாயிகள் அச்சப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
உடுமலை, மடத்துக்குளம் என இரு தாலூகாவிலும் பல 100 சதுர கி.மீ., பரப்பளவில் காட்டுப்பன்றிகள் பரவல் பல மடங்கு அதிகரித்துள்ளது. காட்டுப்பன்றிகளின் பாதிப்பு அதிகரித்தாலும், காட்டுப்பன்றிகள் வனவிலங்குகள் பட்டியலில் இருப்பதால், அவற்றை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையில், விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது,
காட்டுப்பன்றிகளால் பல ஆயிரம் ஏக்கரில் விவசாய சாகுபடி கேள்விக்குறியாகி வருகிறது. வரப்பு பயிர்களை அழித்தல், விளைபொருட்கள் மற்றும் பாசன கட்டமைப்புகளை சேதப்படுத்துதல் என பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறோம். வனத்துறையினர் இப்பிரச்சினைக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், மவுனம் சாதிக்கின்றனர். தென்னை மற்றும் காய்கறி சாகுபடியிலும், காட்டுப்பன்றிகள் தொடர் சேதம் ஏற்படுத்தி வருகின்றன. பாதிப்புகளுக்கு நிவாரணம் கிடைப்பதில்லை
சமவெளிப்பகுதியில் மட்டும் தங்கி பெருகும் காட்டுப்பன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். இதற்கான கருத்துருவை வனத்துறை, வருவாய்த்துறையினர் இணைந்து அரசுக்கு அனுப்ப வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி சில ஆண்டுகளுக்கு முன் உடுமலை பகுதி விவசாயிகள் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போதைய சூழலில் அனைத்து விவசாயிகளும் ஒருங்கிணைந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu