தமிழ் புத்தாண்டு தினம்; திருமூர்த்திமலையில் குவிந்த பக்தர் கூட்டம்

தமிழ் புத்தாண்டு தினம்; திருமூர்த்திமலையில் குவிந்த பக்தர் கூட்டம்
X

Tirupur News. Tirupur News Today- கோவில் முன் திரண்டிருந்த பக்தர்கள் கூட்டம்.

Tirupur News. Tirupur News Today- தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, திருமூர்த்திமலையில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்

Tirupur News. Tirupur News Today - தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, திருமூர்த்திமலையில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் ஒருசேர ஒரே குன்றில் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். கோவில் வளாகத்தில் விநாயகர், சுப்பிரமணியர், சப்தகன்னிமார் மற்றும் நவகிரக சன்னதிகளும் உள்ளன. கோவிலில் மகாசிவராத்திரி, பிரதோஷம், கிருத்திகை, அமாவாசை, தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட விசேஷ நாட்களில் மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.

மேலும், கோவிலுக்கு வருகின்ற வழியில் படகு இல்லம், சிறுவர் பூங்கா, நீச்சல் குளம், திருமூர்த்தி அணை உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் உள்ளன. அவற்றை பார்வையிடவும், அணைப்பகுதியில் அமர்ந்து புகைப்படம் எடுத்து மகிழவும், மலை மீது உள்ள பஞ்சலிங்க அருவியில் விழுகின்ற மூலிகை தண்ணீரில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காகவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வந்து செல்கின்றனர். இதனால் உடுமலை பகுதியின் சிறந்த சுற்றுலா மற்றும் ஆன்மிகத் தலமாக திருமூர்த்திமலை விளங்கி வருகிறது.

அந்தவகையில் நேற்று சித்திரை முதல் நாளான தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அமணலிங்கேஸ்வரர் கோவில் மும்மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் வாகனங்களில் திருமூர்த்திமலைக்கு வந்தனர். பின்னர் பஞ்சலிங்க அருவிக்கு சென்றனர். ஆனால் அருவியில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. இதன் காரணமாக அனைவரும் வரிசையில் நின்று குளித்துவிட்டு அடிவாரப்பகுதிக்கு வந்தனர்.அதன் பின்பு கோவில் முன்பாக உள்ள பாலாற்றில் தீர்த்தம் எடுத்தனர்.பின்னர் தீர்த்தக்குடங்களை பக்தி பரவசத்துடன் மேளதாளங்கள் முழங்கியவாறு கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு சென்று பூஜைகள் செய்தனர். அப்போது ஒரு சில பக்தர்கள் அருள் வந்து பக்தி பரவசத்துடன் ஆடினார்கள். அவர்களை உடன் வந்த பக்தர்கள் எலுமிச்சம் பழம் மற்றும் தீர்த்தம் கொடுத்து சாந்தப்படுத்தினார்கள்.

இதனால் கோவில், பஞ்சலிங்க அருவி, நீச்சல்குளம், திருமூர்த்திஅணை உள்ளிட்ட பகுதியில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருமூர்த்தி மலையில் தளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது