விவசாயியை கத்தியால் குத்திய போலீஸ்காரர்; உடுமலையில் பரபரப்பு

விவசாயியை கத்தியால் குத்திய போலீஸ்காரர்; உடுமலையில் பரபரப்பு
X

tirupur News, tirupur News today- கத்தியால் குத்தப்பட்ட விவசாயி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். (உள்படம்) போலீஸ்காரர் செந்தில் குமார். (கோப்பு படம்)

tirupur News, tirupur News today- நில விவகாரத்தில், அதிகாரிகள் முன்னிலையில், போலீஸ்காரர் ஒருவர், விவசாயியை கத்தியால் குத்திய சம்பவம், உடுமலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

tirupur News, tirupur News today- திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள ராவணபுரத்தை சேர்ந்தவர் ரங்கநாதன்( வயது 53). இவர் உடுமலை கரட்டூரை சேர்ந்த தங்கவேலு என்பவருக்கு கடந்த 2003-ம் ஆண்டு புரோ நோட்டு மூலமாக ரூ.2 லட்சம் கடன் கொடுத்ததாக தெரிகிறது. அதை பலமுறை கேட்டும் தங்கவேலு திருப்பி கொடுக்கவில்லை. அதைத்தொடர்ந்து புரோ நோட்டை வைத்து ரங்கநாதன் தரப்பில் உடுமலை சப் -கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில் கடந்த 2008-ம் ஆண்டு வலையபாளையத்தில் உள்ள தங்கவேலுக்கு சொந்தமான 10.50 ஏக்கர் நிலத்தை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவிட்டது.

இதையடுத்து கோர்ட் வாயிலாக அந்த நிலத்தை ரூ. 7 லட்சத்து 50 ஆயிரத்து 300க்கு ரங்கநாதன் ஏலம் எடுத்துள்ளார். இதையடுத்து 2 முறை நீதிமன்ற அமீனா மூலமாக நிலத்தை சுவாதீனத்துக்கு எடுக்க ரங்கநாதன் முற்பட்டு உள்ளார். ஆனால் முடியவில்லை.

நேற்று முன்தினம் கோர்ட் உத்தரவுபடி அமீனா, நில அளவையர், கிராம நிர்வாக அதிகாரி மற்றும் போலீசார் தங்கவேலுக்கு சொந்தமான நிலத்தை அளக்க முயற்சி செய்தனர். அப்போது அங்கிருந்த தங்கவேல் மகனும் பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் தலைமை காவலருமான செந்தில்குமார், அவரது சகோதரர் முத்துக்குமார் மற்றும் சேகர், முகம்மது ரியாஸ், சுந்தரவடிவேல், தங்கவேல், பரணி மற்றும் பெயர் தெரியாத ஒருவர் ஆகியோர் அரசு பணியாளர்களை நிலத்தை அளக்கவிடாமல் தடுத்தனர்.

மேலும், செந்தில்குமார் 2 லட்ச ரூபாய்க்கு ரூ. 7 கோடி சொத்து வேணுமா என்று கூறி இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரங்கநாதனை சரமாரியாக குத்தினார். இதில் அவருக்கு 2 இடங்களில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த அவர் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து ரங்கநாதன் அளித்த புகாரின் பேரில் தளி போலீசார் வழக்குபதிவு செய்து, தலைமறைவான போலீஸ்காரர் செந்தில்குமாரை தேடி வருகின்றனர். நில அளவீடுக்கு சென்ற போது அதிகாரிகள் முன்னிலையில், திடீரென விவசாயியை போலீஸ்காரர் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil