உடுமலையில், அதிகரித்த காட்டு யானைகள் நடமாட்டம்; வனத்துறை எச்சரிக்கை
Tirupur news, Tirupur news today- ரோட்டில் உலா வரும் காட்டு யானைகள் (கோப்பு படம்)
Tirupur news, Tirupur news today- திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்குள்ள உடுமலை, அமராவதி உள்ளிட்ட வனச்சரகங்களில் யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை, கரடி, கருஞ்சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அவற்றிற்கு தேவையான உணவு தேவையை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளும் தண்ணீர் தேவையை அடர்ந்த வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகளும் பூர்த்தி செய்து தருகின்றன. இதனால் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிகம் நம்பி உள்ளது.
இந்நிலையில், கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் வனப்பகுதி அதில் உற்பத்தியாகின்ற ஆறுகள் வறட்சியின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றன. இதனால் வனவிலங்குகளுக்கான உணவு தண்ணீர் தேவையை பூர்த்தி அடைவதில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.அதைத் தொடர்ந்து யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிவாரப்பகுதிக்கு வந்து விட்டதாக தெரிகிறது.
அமராவதி அணையிலும் நீர்இருப்பு உள்ளதால் அணைப்பகுதிக்குள் வனவிலங்குகள் முகாமிட்டு வருகின்றன. இதனால் அவற்றுக்கான உணவு தண்ணீர் தேவை தற்காலிகமாக பூர்த்தி அடைந்து உள்ளது. மேலும் யானைகள் காலை நேரத்தில் உடுமலை - மூணாறு சாலையை கடந்து வனப்பகுதிக்குள் செல்வதும் மாலையில் அணைப்பகுதிக்கு வருவதுமாக உள்ளது. வனத்துறை எச்சரிக்கை அப்போது ஒரு சில வாகன ஓட்டிகள் அதிக சத்தத்தை எழுப்பி யானைகளுக்கு தொந்தரவு கொடுப்பதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக யானைகள் மிரட்சி அடைந்து வாகனஓட்டிகளை துரத்திச் சென்ற சம்பவமும் நிகழ்ந்து உள்ளது. இதனால் உடுமலை மூணாறு-சாலையில் யானைகள் நடமாட்டம் இருந்தால் அவை சாலையை கடக்கும் வரையிலும் வாகன ஓட்டிகள் அமைதியாக இருந்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.யானைகள் மிரட்சி அடையும் வகையில் ஒலி எழுப்புவதோ, அவற்றின் மீது கற்களை வீசுவதோ, செல்பி, புகைப்படம் எடுப்பதற்கோ முயற்சி செய்யக் கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
அத்துடன் உடுமலை மூணாறு- சாலை மலைஅடிவாரப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவைத் தேடிக்கொண்டு அண்டை மாநிலமான கேரளா வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
யானைகளை பொருத்தவரை உணவு தேடியோ, குடிநீர் தேவைக்காகவோ ரோட்டோர பகுதிகளுக்குள் கூட்டமாக வருகின்றன. அப்படி வரும் நேரங்களில், அவற்றை விரட்டடேவா, மொபைல் போனில் படம் பிடிக்கவோ, யானைகளுக்கு அருகில் வாகனங்களில் வேகமாக செல்லவோ கூடாது. குறிப்பாக, ‘செல்பி’ எடுக்கும் ஆர்வத்தில், பொதுமக்கள் யாரும் யானைகள் உள்ள பகுதிகளுக்கு மிக அருகில் செல்வதும் மிக ஆபத்தானது. எந்த வகையிலும், யானைகளுக்கு இடையூறு செய்யக்கூடாது என, வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu