உடுமலையில் நீர்வரத்து இன்றி வறட்சியில் அணைகள்; விவசாயிகள் கவலை
Tirupur News. Tirupur News Today- அமராவதி அணை (கோப்பு படம்)
Tirupur News. Tirupur News Today- திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகள் உள்ளன. வனப்பகுதியில் உற்பத்தியாகிற நீராதாரங்கள் அணைகளுக்கு நீர்வரத்தை அளிக்கிறது. அதை அடிப்படையாகக் கொண்டு திருமூர்த்தி அணை மூலமாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பி.ஏ.பி. பாசன திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம், 4 மண்டலங்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் வினியோகம் பெற்று வருகிறது. இதற்கு பி.ஏ.பி. தொகுப்பு அணைகளும், நீர்வரத்தை அளித்து உதவி புரிகிறது.
அதுமட்டுமின்றி உடுமலை, பூலாங்கிணர், கணக்கம்பாளையம், குடிமங்கலம், மடத்துக்குளம் உள்ளிட்ட கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தண்ணீர் வரத்து நின்றது அதே போன்று, அமராவதி அணை மூலமாக பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை அடிப்படையாகக் கொண்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த சூழலில், கடந்த சில நாட்களாக கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள நீராதாரங்கள் நீர்வரத்து இல்லாமல் வறண்டு விட்டது. அணைகளுக்கு வந்து கொண்டிருந்த தண்ணீரும் முற்றிலுமாக நின்று விட்டது. இதனால் நீர்வரத்து இல்லாமல் அணைகள் தத்தளித்து வருகிறது. ஆங்காங்கே மண் திட்டுக்களாக தோற்றம் அளித்து வருகிறது. இந்த சூழலில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்வதற்கு உண்டான சூழல் நிலவி வருகிறது. ஆனால், மழையானது அணைகளின் நீராதாரங்களில் பெய்யவில்லை. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
மேலும் கோடை காலத்தை பயன்படுத்தி அணைகள் தூர்வாரும் பணி தொடங்கப்படுமா என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர். நேற்று காலை நிலவரப்படி, 60 அடி உயரம் கொண்ட திருமூர்த்தி அணையில் 30.71 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 129 கன அடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 116 கனஅடி தண்ணீரும் நல்லாற்றில் இருந்து 45 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. அணைப்பகுதியில் ஒரு மில்லி மீட்டர் மழையும் நல்லாறு பகுதியில் 3 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. நேற்று காலை நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணையில் 55.06 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 223 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu