உடுமலையில், மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தர்கள் பரவசம்

உடுமலையில், மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தர்கள் பரவசம்
X

Tirupur News. Tirupur News Today- உடுமலையில், மாரியம்மன் கோவில் தேரோட்டம், பக்தர்கள் பரவசமாக தேர்வடம் பிடித்து இழுத்தனர்.

Tirupur News. Tirupur News Today- உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டம், பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, விமரிசையாக நடைபெற்றது.

Tirupur News. Tirupur News Today- திருப்பூர் மாவட்டம், உடுமலையில் பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது இக்கோவில் கடந்த மாதம், 28-ந்தேதி தேர்த்திருவிழா துவங்கியது.

நேற்று முன்தினம், மாலை அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று காலை, 6:15 மணிக்கு, சூலத்தேவருடன் அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளினார். மாரியம்மன் கோவிலில், 500 ஆண்டு பழமையான தேர் இருந்தது. நடப்பாண்டு, பழைய தேருக்கு பதிலாக, புதிதாக எண் கோணவடிவத்தில், அற்புத வேலைப்பாடுகளுடன், அகலம் மற்றும் உயரம் அதிகம் கொண்ட பிரமாண்ட தேர் வடிவமைக்கப்பட்டு, புதிய தேரில் சுவாமி திருத்தேரோட்டம் நடந்தது.

மாலை, 4:10மணிக்கு, திருத்தேர் வடம் பிடித்து துவக்கி வைக்கப்பட்டது. பக்தர்களின் 'ஓம் சக்தி பராசக்தி' கோஷம் முழங்க அலங்கரிக்கப்பட்ட புதிய தேரில் நீல பட்டு உடுத்தி ரத்தினக்கல் ஆபரணங்களுடன் சூலத்தேவருடன் எழுந்தருளிய அம்மன் தேரோடும் வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேருக்கு முன் பல்வேறு இசைக்க ருவிகள், வாத்தியங்கள் முழங்க, பக்தர்களின் பாரம்பரிய நடனம் என களைகட்டியது. தேரை முன்னே பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, பின்னால் மதுரையிலிருந்து வரவழைக்கப்பட்ட 'குஷ்மா' யானை, தேரை நகர்த்தி பக்தர்களுக்கு உதவியது.

தேரோட்டத்தை முன்னிட்டு, நீர் மோர் பந்தல், அன்னதானம், விளையாட்டு, பொழுதுபோக்கு அம்சங்கள் என நகரம் விழாக்கோலமாக காணப்பட்டது.

தேரோட்டத்தை பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி சண்முக சுந்தரம் எம்.பி., மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி சி.மகேந்திரன் எம்.எல்.ஏ., கோவில் பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ்.ஸ்ரீதர் மற்றும் யு.எஸ்.சஞ்சீவ் சுந்தரம், அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை, உதவி ஆணையர் செந்தில், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கீர்த்தி என்ற சுப்பிரமணியம், மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் சீனிவாசன் ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.

விழாவில் அறங்காவலர் தலைவர், செவ்வேள், சிவக்குமார், நியூ மேன், பினில், ராம்குமார், அருண்குமாரி வடுகநாதன், ரமேஷ், சதீஷ்குமார், ஜெயக்கனி, மஞ்சுளா தேவி, செல்வநாயகம், ஏவிஎம் தங்கமணி, கிருஷ்ணன் கலையரசன், கஜேந்திர பட்டாச்சாரியார் கண்ணன் திருச்சி ஸ்டீல், ஜஸ்டின் ராஜா, சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது