திருமூர்த்தி அணையில் தண்ணீர் திறந்து விட கோரிக்கை

திருமூர்த்தி அணையில் தண்ணீர் திறந்து விட கோரிக்கை
X

திருமூர்த்தி அணை தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பான கோரிக்கை வைக்கப்பட்டது 

திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ. பி., திட்டத்தில், 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன.

கடந்த ஆக., 3ம் தேதி, நான்காம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு, ஐந்து சுற்று வினியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், முதலாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி, திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம் மற்றும் பாசன சபை தலைவர்கள், நீர்வளத்துறை பி. ஏ. பி.. தலைமை பொறியாளர் முத்துசாமியை சந்தித்து மனு கொடுத்தனர்.

திட்டக்குழு தலைவர் கூறுகையில், 'திருமூர்த்தி அணையில் இருந்து, நான்காம் மண்டல பாசனத்துக்கு, 16ம் தேதியுடன் பாசன காலம் நிறைவடைகிறது. முதலாம் மண்டல பாசனத்துக்கு, வரும், 25ம் தேதி முதல் ஐந்து சுற்று தண்ணீர்,மொத்தம், 9,500 மில்லியன் கனஅடி வழங்க வேண்டும் என, அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது, " என்றார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!