திருமூர்த்தி அணையில் நீர்வரத்து குறைவு

திருமூர்த்தி அணையில் நீர்வரத்து குறைவு
X

கோப்பு படம் 

மழை குறைந்ததால், அமராவதி ஆற்றில் நீர்மட்டம் குறைய துவங்கியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை திருமூர்த்தி அணைப்பகுதியில், கடந்த மாதங்களில் பெய்த தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் பல முறை நிரம்பி, உபரி நீர் திறந்து விட்டது. இதனால் பாசனம் பகுதி சார்ந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். அணைநீர் வந்ததால், ஆழ்துளை கிணற்று நீரை பயன்படுத்துவதை குறைத்தனர்.

தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் குறைய துவங்கியிருக்கிறது. 60 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம், 52 அடியாக உள்ளது.மழை குறைந்ததால், அமராவதி ஆற்றில் நீர்மட்டம் குறைய துவங்கி இருப்பது, விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!