திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: 994 கன அடி தண்ணீர் வெளியேற்றம்

திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: 994 கன அடி தண்ணீர் வெளியேற்றம்
X

திருமூர்த்தி அணை.

திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணை நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை, திருமூர்த்தி மலைப்பகுதிகளில், கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வரும் நிலையில், இரு நாட்களாக கன மழை பெய்தது. இதனால், பஞ்சலிங்கம் அருவி ஆர்ப்பரித்து கொட்டியது. பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, திருமூர்த்தி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து.

தற்போதைய நிலவரப்படி, திருமூர்த்தி அணையில் மொத்தமுள்ள 60 அடியில், 53 அடியாகவும், நீர் இருப்பு, 1,629.73 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. அணைக்கு, பாலாற்றின் வழியாக, வினாடிக்கு, 678 கன அடி நீரும், காண்டூர் கால்வாய் வழியாக, 876 கன அடி என 1,554 கன அடி நீர்வரத்து காணப்பட்டது. 994 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Tags

Next Story
சிறுநீரகத்துல நச்சுக்கள் இருக்கா ?..உடனே வெளியேற்ற இந்த சில பழங்கள சாப்டுங்க..!| Best fruits for kidney cleansing naturally in tamil