பச்சிளம் குழந்தை தண்ணீரில் மூழ்கடித்து கொலை; ‘பாசக்கார’ தாய் கொன்றது அம்பலம்

பச்சிளம் குழந்தை தண்ணீரில் மூழ்கடித்து கொலை; ‘பாசக்கார’ தாய் கொன்றது அம்பலம்
X

Tirupur News,Tirupur News Today- பிறந்து 35 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை, தண்ணீரில் மூழ்கடித்து கொலை ( கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- உடுமலை அருகே பச்சிளம் குழந்தையை தண்ணீர் தொடடியில் மூழ்கடித்து கொலை செய்த தாயிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tirupur News,Tirupur News Today- உடுமலை அருகே பச்சிளம் குழந்தையை தண்ணீர் தொடடியில் மூழ்கடித்து கொலை செய்த தாயை போலீசார் பிடித்து, விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த தீபாலபட்டியைச் சேர்ந்தவர் சசிகுமார் (வயது 28). இவருக்கும் வசந்தி (26) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அதன்பின் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். அப்போது வசந்திக்கு வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டு அவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். அதன் பின்பு சிறிது காலம் அவருடன் குடும்பம் நடத்தினார். பின்னர் 2-வது கணவரை விட்டு பிரிந்து, மீண்டும் முதல் கணவருடன் சேர்ந்து வாழ்ந்தார். இதனால் வசந்தி கர்ப்பமாகி பெண் குழந்தையை பெற்றார். அந்த குழந்தை பிறந்து 35 நாட்கள் ஆகிறது.

இந்நிலையில், நேற்று வசந்தி குடும்ப பிரச்னை காரணமாக குழந்தையை தண்ணீர் தொட்டிக்குள் போட்டு விட்டதாக தெரிகிறது. குழந்தை இறந்ததாக நாடகம் அதை மறைப்பதற்காக குழந்தை தொட்டியில் கை தவறி விழுந்து விட்டது என்று நாடகமாடினார். பின்னர் குழந்தையை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்த தளி போலீசார் வசந்தியை பிடித்து போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் தண்ணீர் தொட்டியில் குழந்தையை மூழ்கடித்து கொலை செய்ததை வசந்தி ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்து 35 நாட்கள் ஆன பச்சிளம் குழந்தையை பெற்ற தாயே தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்தது, உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil