கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பு வார்டில் சிகிச்சை

கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பு வார்டில் சிகிச்சை
X
சிறப்பு வார்டில் ஒரு டாக்டர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் என மூன்று ஷிப்ட்களில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்று வட்டார பகுதிகளில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உடுமலை அரசு மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் அரசு கலைக் கல்லூரியில் கூடுதலாக சிறப்பு வார்டு அமைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி கூடுதல், சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டது. இந்த சிறப்பு வார்டில், கொரோனா பாதிக்கப்பட்ட 15 பேர் இன்று சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

வார்டு பகுதியை உடுமலை நகராட்சி நகர்நல அலுவலர் கவுரி கிருஷ்ணன், அமராவதிநகர் மருத்துவ அலுவலர் மனோஜ்குமார் உள்ளிட்போர் பார்வையிட்டனர். மருத்துவர்கள் கூறுகையில், சிறப்பு வார்டில் இன்று முதல் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒரு டாக்டர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் என மூன்று ஷிப்ட்களில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கலைக் கல்லூரிக்கு வேறு நபர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என்றனர்.

Tags

Next Story
ai in future agriculture