மின் வினியோக பிரச்சினைக்கு தீர்வு- ஆலாமரத்துார் பகுதி மக்கள் நிம்மதி

மின் வினியோக பிரச்சினைக்கு தீர்வு- ஆலாமரத்துார் பகுதி   மக்கள் நிம்மதி
X
ஆலாமரத்துார் துணை மின்நிலையத்தில், கிராமங்களுக்கு சீரான மின் வினியோகம் துவங்கியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே, குடிமங்கலம் ஒன்றியம், ஆலாமரத்துாரில், 2019ல், மின்வாரியம் சார்பில், புதிய துணை மின் நிலையம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதன் மவாயிலாக, சுற்றுப்பகுதிகளை சேர்ந்த, 25க்கும் அதிகமான கிராமங்கள், பயன்பெற்று வந்தன. புதிய துணை மின்நிலையத்தால், கிராமங்களில், தாழ்வழுத்த மின்வினியோக பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது.

இந்தாண்டு மே மாதம், பெய்த மழை, இடி தாக்குதலால், துணை மின் நிலையத்தில், டிரான்ஸ்பார்மர் உட்பட முக்கிய கருவிகள் சேதமடைந்தன. சீரமைப்பு பணிகளுக்கு தேவையான உதிரிபாகங்கள் கிடைக்காததால், பிற மாநிலத்தில் இருந்து பாகங்களை பெறுவதிலும் ஊரடங்கு உட்பட பிரச்னைகளால், சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, பழைய முறையில், கொங்கல்நகரம், நெகமம், பூளவாடி உட்பட, 5 பீடர்கள் வாயிலாக, மின்சாரம் வினியோகிக்கப்பட்டது. கூடுதல் மின்திறன் உட்பட காரணங்களால், பழைய பீடர்களில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது.

இந்நிலையில், 7 மாத இழுபறிக்கு பிறகு, ஆலாமரத்துார் துணை மின் நிலையத்தில், புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து, கருவிகள் சீரமைக்கப்பட்டு, மின்வினியோகம் துவங்கியது. மின் வினியோக பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளதால், கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!