உடுமலையில் 384 மதுபாட்டில்கள் பறிமுதல்

உடுமலையில் 384 மதுபாட்டில்கள் பறிமுதல்
X
உடுமலைப்பகுதியில் நடந்த வாகன சோதனையில் 384 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். சப் இன்ஸ்பெக்டர் தேவராஜ் மற்றும் தனிப்பிரிவு போலீஸ ஜெயப்பிரகாஷ் ஆகியோர் உடுமலைப்பேட்டை– பொள்ளாச்சி ரோட்டில் வாகன தணிக்கை செய்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனை செய்தபோது, காருக்குள் வெளிமாநில மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பெங்களூரில் இருந்து கார் மூலம் 384, மது பாட்டில்களை கொண்டுவந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மதுபாட்டில்களை கடத்திவந்த மன்சூர் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!