/* */

உடுமலை ஊராட்சி பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்

ராகல்பாவி துவக்கப்பள்ளியில் நடந்த மேலாண்மை குழு கூட்டத்தில், அரசின் தொற்று தவிர்ப்பு ஆலோசனை துண்டுபிரசுரம் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

உடுமலை ஊராட்சி பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்
X

மேலாண்மை குழு கூட்டத்தில் அரசின் தொற்று தவிர்ப்பு ஆலோசனை துண்டுபிரசுரம் வழங்கப்பட்டது.

உடுமலை, ராகல்பாவியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு தலைமையாசிரியர் சாவித்ரி தலைமை வகித்தார். அரசின் வழிகாட்டு நெறிமுறைப்படி, வரும் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை தயங்காமல் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். தேவையான, தொற்று தடுப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன எனவும் அறிவுறுத்தப்பட்டது.

சளி, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் பிள்ளைகளுக்கு ஏற்பட்டால், அதுகுறித்த தகவலை, ஆசிரியர்களிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டது. தொற்று தடுப்பு விழிப்புணர்வு அறிவுரை, அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரமும் வினியோகிக்கப்பட்டது. பள்ளி உதவி ஆசிரியர் கண்ணபிரான், நன்றி கூறினார்.

Updated On: 29 Oct 2021 3:00 PM GMT

Related News