குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்களில் ரூ.24.32 கோடியில் சாலை மேம்பாட்டு பணி
Tirupur News,Tirupur News Today- குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்களில் சாலை மேம்பாட்டு பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குடிமங்கலம், உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்களில் ரூ.24.32 கோடியில் சாலை மேம்பாட்டு பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
குடிமங்கலம் ஒன்றியம் கொங்கல் நகரம் முதல் லிங்கம்மாவூர் வரை, வடுகபாளையம் ஊராட்சி பொள்ளாச்சி-தாராபுரம் சாலை முதல் வடுகபாளையம் வரை, ஆமந்தக்கடவு ஊராட்சி அம்மாபட்டி முதல் ஆமந்தக்கடவு வரை, கோட்டமங்கலம் ஊராட்சி உடுமலை திருப்பூர் சாலை முதல் குமாரபாளையம் வரை, சோமவாரப்பட்டி ஊராட்சி உடுமலை செஞ்சேரிமலை சாலை முதல் பொட்டிநாயக்கனூர் சாலை வரை தார் சாலை பலப்படுத்துதல் பணி உள்பட பல்வேறு பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
அதே போல் உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் சாலை மேம்பாட்டு பணி தொடக்க விழா மற்றும் முடிவுற்ற பணிகள் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லட்சுமணன் தலைமை வகித்தார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு சாலை மேம்பாட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 8 ஊராட்சிகளுக்கு 9 குப்பை சேகரிக்கும் வாகனங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் சின்னவீரம்பட்டி நடுநிலைப்பள்ளியில் வகுப்பறை கட்டிடங்களை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். அதன்படி உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் ரூ.24 கோடியே 32 லட்சத்திற்கு வளர்ச்சி திட்ட பணிகள் நடக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu