உடுமலை பகுதிகளில் டெங்கு பரவும் அபாயம்: சுகாதாரப்பணிகள் தீவிரம்

உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில், முழு சுகாதாரப்பணி மேற்கொள்ளப்பட்டது.

உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில், முழு சுகாதாரப்பணி மேற்கொள்ளப்பட்டது.

உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில், சமீபத்தில் பெய்த கனமழையால், நீர் நிலைகளில், தண்ணீர் தேங்கி, கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால், டெங்கு உள்ளிட்ட நோய் பரவும் வாய்ப்புள்ளது என்ற அச்சம், மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஒவ்வொரு ஒன்றியத்திற்கும், கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, முழு சுகாதாரப்பணி மேற்கொள்ள, ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் திட்டமிட்டது. அதன்படி, உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகளிலும், முழு சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நீர் நிலைகளில், கொசு உற்பத்தியை தடுக்க 'அபேட்' மருந்து தெளிக்கப்பட்டது. வீடுகள் மற்றும் பொது இடங்களில், பயன்படுத்தப்படாத பொருட்களில், தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற அறிவுரை வழங்கப்பட்டது. மக்களிடம் காய்ச்சல் தடுப்பு குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil