அதிகரிக்கும் கொரோனா தொற்று: திருப்பூர் மாவட்ட எல்லைகளில் தீவிர சோதனை

அதிகரிக்கும் கொரோனா தொற்று: திருப்பூர் மாவட்ட எல்லைகளில் தீவிர சோதனை
X

உடுமலை எல்லைப் பகுதியில் தொற்று கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது .

மாநில மற்றும் மாவட்ட எல்லைகளில் சோதனைகளை தீவிரப்படுத்த, மாவட்ட நிர்வாகங்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்ட எல்லைகளில் சோதனை, தொற்றுப்பரவலை கட்டுப்படுத்த கண்காணிப்பு மற்றும் தற்காலிக மருத்துவமனை அமைக்க ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு, வழிபாட்டு தலங்களில், வார இறுதி நாட்களில் பக்தர்களுக்கு அனுமதி ரத்து, 1 முதல் 9ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.

மாநில மற்றும் மாவட்ட எல்லைகளில் சோதனைகளை தீவிரப்படுத்தவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில், மாநில எல்லையான சின்னாறு சோதனைச்சாவடியில், சுகாதாரத்துறையின் முகாம் அமைக்கப்பட்டு, சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். திருப்பூர் மாவட்ட எல்லைகளான, மடத்துக்குளம், அந்தியூர், புதுப்பாளையம், தேவனுார் புதுார் ஆகிய பகுதிகளில், சுகாதாரத்துறை சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை அலுவலர்கள், நோய் அறிகுறி காணப்படுகிறதா என சோதனை செய்த பிறகே, அனுமதிக்கின்றனர். தொற்று அறிகுறி தெரிந்தால், சளி மாதிரி எடுத்து, பரிசோதனைக்கு அனுப்பி வருகின்றனர். மேலும், முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. தொற்றுப்பரவல் அதிகரித்தால், அனைவருக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில், தற்காலிக மருத்துவமனை மற்றும் சிகிச்சை மையங்கள் அமைப்பது குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் ஆய்வு செய்தார்.

Tags

Next Story
ராசிபுரம் பகுதியில் அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கான ஆலோசனை கூட்டம்!