'வணிக நிறுவனங்களை பதிவு செய்யுங்க' வியாபாரிகளுக்கு அறிவுரை

வணிக நிறுவனங்களை பதிவு செய்யுங்க  வியாபாரிகளுக்கு அறிவுரை
X

உடுமலையில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஏற்பாடு செய்த கூட்டத்தில் பங்கேற்ற வியாபாரிகள்.

உடுமலையில், உணவு பாதுகாப்பு துறையினரின் சிறப்பு முகாம் நடந்தது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள குடிமங்கலத்தில், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையினர் சார்பில், சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

புதியதாக உணவு பாதுகாப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள சிரஞ்சீவி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், குடிமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வியாபாபாரிகள் பங்கேற்றனர். வணிக நிறுவனங்கள் முறைப்படி பதிவு செய்து கொள்ள வேண்டும். தரமற்ற, கலப்பட பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்பது போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில், ஏராளமான வியாபாரிகள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!