மழையால் பாதிக்கபட்ட வீடுகள்: முன்னாள் எம்.எல்.ஏ., ஆய்வு

மழையால் பாதிக்கபட்ட வீடுகள்: முன்னாள் எம்.எல்.ஏ., ஆய்வு
X

 மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராம கிருஷ்ணன் பார்வையிட்டார் 

மழையால் பாதிக்கப்பட்ட மக்களை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

உடுமலை ஒன்றியப் பகுதியில் சில நாட்களுக்கு முன் பலத்த மழை பெய்தது. மழையால், பல இடங்களில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. கண்ணமநாயக்கனூர் ஊராட்சி, நேரு நகர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராம கிருஷ்ணன், பார்வையிட்டார்.

மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நேரில் சென்ற அவர், அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார். மழையால் பாதிக்கப்பட்ட பலர், ஊராட்சி மன்ற தலைவர் கருப்பம்மாள், ஏற்பாட்டின் படி அங்குள்ள அரசுப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களையும், சட்டமன்ற உறுப்பினர் சந்தித்து, ஆறுதல் கூறினார். தேவையான உதவிகளை அரசிடம் இருந்து பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.

Tags

Next Story
ai in future agriculture