உடுமலை பகுதியில் புதர் மண்டிய குடிநீர் குழாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

உடுமலை பகுதியில் புதர் மண்டிய குடிநீர் குழாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
X
உடுமலை பகுதியில் புதர் மண்டிய குடிநீர் குழாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

உடுமலை நாராயணன் காலனி குடிநீர் குழாய் அருகில் உள்ள புதர்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு பகுதியில் நாராயணன் காலனி உள்ளது. இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான குடிநீரை நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து கொடுத்து உள்ளது. இதற்காக ஆங்காங்கே குடிநீர் குழாய்களும் அமைக்கப்பட்டு உள்ளது. அதன் மூலமாக பொதுமக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். இந்த சூழலில் நாராயணன் காலனியில் உடுமலை பழனி நெடுஞ்சாலையை ஒட்டியவாறு உள்ள குடிநீர் குழாயை சுற்றிலும் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில் பொதுமக்களுக்கு அன்றாட அத்தியாவசிய தேவையில் குடிநீர் முக்கிய பங்கு வைக்கிறது. ஆனால் அதை முழுமையாக பெற முடியாத சூழல் நாராயணன் காலனியில் நிலவுகிறது. இங்குள்ள குடிநீர் குழாயை சுற்றிலும் புதர்மண்டி விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளது. சில நேரங்களில் பாம்புகள் இங்கு படம் எடுத்து ஆடுகின்றன. இதனால் குழாயில் குடிநீரை பிடிக்கச் செல்லும் பொது மக்கள் குறிப்பாக பெண்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். இதன் காரணமாக ஒரு சிலர் குடிநீர் பிடிப்பதையே தவிர்த்து வருகின்றனர். இது குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகம் மக்கள் பிரதிநிதியிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே நாராயணன் காலனியில் குடிநீர் குழாயை சூழ்ந்துள்ள செடிகள், கழிவுகள், மண் திட்டுகளை அகற்றி பொதுமக்கள் அச்சமின்றி குடிநீர் பிடிப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!