உடுமலை- கொழுமம் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

உடுமலை- கொழுமம் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
X

Tirupur News-உடுமலை- கொழுமம் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரிக்கை (கோப்பு படம்)

Tirupur News - உடுமலை- கொழுமம் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என, பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து பழனி செல்லும் சாலையில் பிரிந்து செல்லும் கொழுமம் ரோட்டில் அகல ரயில்வே பாதை உள்ளது. இந்த வழியாக எஸ்.வி.புரம், கண்ணமநாயக்கனூர், உரல்பட்டி, மலையாண்டி கவுண்டனூர், பாப்பான் குளம், பெருமாள் புதூர், சாமராய பட்டி, குமரலிங்கம், கொழுமம், ருத்ராபாளையம், திண்டுக்கல் மாவட்டம் பழனி, ஆண்டிப்பட்டி என சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு உடுமலையில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன.

மேலும் உடுமலையில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் ரயில்வே கேட்டை கடந்து தான் செல்ல வேண்டும். உடுமலையிலிருந்து பழனி மார்க்கமாக மதுரை, திருச்செந்தூர், சென்னை உள்பட பல நகரங்களுக்கு பயணிகள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் அடிக்கடி ெரயில்கள் கடந்து செல்வதால் கேட் மூடப்பட்டு பல மணி நேரம் பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது,

உடுமலையிலிருந்து தளி ரோட்டில் மேம்பாலம் கட்டும் போதே கொழுமம் ரோட்டிலும் மேம்பாலம் கட்ட வேண்டுமென பல்வேறு தரப்பினர்களும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அகல ரயில்வே பாதை அமைக்கப்பட்டதால் மக்களின் வசதிக்காக கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது. அதே சமயம் உடுமலை- கொழுமம் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் கட்டவும் ரயில்வே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

Tags

Next Story