பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் இலவச மருத்துவ முகாம்

பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் இலவச மருத்துவ முகாம்
X

உடுமலை பொண்ணு மெட்ரிக் பள்ளி முன்னாள் மாணவர் அறக்கட்டளை சார்பில், இலவச மருத்துவ முகாம் நடந்தது.

உடுமலையில், பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், இலவச மருத்துவ முகாம் நடந்தது.

உடுமலையில், பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், இலவச மருத்துவ முகாம் நடந்தது. பொன்னு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் அறக்கட்டளை தலைவர் கனகராஜ் ராமசாமி ஏற்பாட்டில் நடைபெற்ற இம்முகாமில், பள்ளி தாளாளர் வி.எஸ்.என். ஆறுச்சாமி தலைமை வகித்தார். தாராபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் தனராசு, நகராட்சி ஆணையர் ராமர் ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர்.

பள்ளி முதல்வர் மணியரசன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மருத்துவர் தங்கராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர். 300க்கும் அதிகமானோர் முகாமில் பங்கேற்று பயனடைந்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்