மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.5.12 கோடியில் திட்டப் பணிகள் துவக்கம்
Tirupur News- மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.5.12 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா்.
Tirupur News,Tirupur News Today- மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.5.12 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். மேலும் ரூ.2.10 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளையும் திறந்து வைத்தாா்.
மடத்துக்குளம் ஒன்றியம், ஜோத்தம்பட்டி ஊராட்சியில் ரூ.75 லட்சம் மதிப்பில் மகளிா் சுயஉதவிக் குழு கட்டடம், பாப்பன்குளம் ஊராட்சியில் ரூ.75 லட்சம் மதிப்பில் மகளிா் சுயஉதவிக் குழு கட்டடம், மைவாடி ஊராட்சியில் ரூ.60.50 லட்சம் மதிப்பீட்டில் மு.கருணாநிதி நூற்றாண்டு நினைவு நுழைவாயில் என ஆக மொத்தம் ரூ.2.10 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திறந்துவைத்தாா்.
மேலும், மடத்துக்குளம் வட்டத்தில் ரூ.4.92 கோடி மதிப்பீட்டில் அமராவதி பிரதான கால்வாயின் குறுக்கு கட்டட அமைப்புகளை புனரமைக்கும் பணி மற்றும் மைவாடி ஊராட்சி போளரப்பட்டியில் ரூ.20.20 லட்சம் மதிப்பீட்டில் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கம் கட்டடம் அமைக்கும் பணி ஆகியவற்றை தொடங்கிவைத்தாா்.
இதில் திருப்பூா் மாநகராட்சி 4-ம் மண்டலத் தலைவா் இல.பத்மநாபன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள், திமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu