'சிறைவாசிகளுக்கு சட்ட உதவி மையம் மூலம் சட்ட உரிமை பெறலாம்'

சிறைவாசிகளுக்கு சட்ட உதவி மையம் மூலம் சட்ட உரிமை பெறலாம்
X

உடுமலை கிளை சிறையில்,  சட்ட உதவி முகாம் நடந்தது.

'சிறைவாசிகளும், சட்ட உதவி மையம் மூலம் தங்களது சட்ட உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ள முடியும்' என, தெரிவிக்கப்பட்டது.

சட்ட பணிகள் ஆணைக்குழுவின் வெள்ளி விழாவை முன்னிட்டு, கிராமங்கள், பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அவ்வகையில், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளைச்சிறையில் உள்ள சிறைவாசிகளுக்கு, சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பாக்கியராஜ் தலைமை வகித்தார். வக்கீல்கள், மகேஸ்வரன், தம்பி பிரபாகரன், மகாலட்சுமி, பிரபு ஆகியோர் பேசினர்.

சிறைவாசிகளும் சட்ட உதவி மையத்தின் மூலம், தங்கள் குடும்பத்தினருக்கு தேவையான சட்ட உரிமைகளை பெற்றுக் கொடுக்க முடியும் என, இம்முகாமில் தெரிவிக்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!