பராமரிப்புப்பணி: உடுமலையில் நாளை மின்வெட்டு

பராமரிப்புப்பணி: உடுமலையில் நாளை மின்வெட்டு
X
உடுமலையில், நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திருப்பூர் மாவட்டம், உடுமலை, பூலாங்கிணறு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை பூலாங்கிணறு, அந்தியூர், சடையபாளையம், சுண்டக்காம்பாளையம், வாளவாடி, ராகல்பாவி, தளி, மொடக்குபட்டி, ஆர் வேலூர், குறிச்சிக்கோட்டை, திருமூர்த்தி நகர், பொன்னலாம்மன் சோலை, விளமரத்துப்பட்டி, கஞ்சம்பட்டி, உடுக்கம்பாளையம், குண்டலபட்டி, லட்சுமபுரம், தென் குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

கிழவன் காட்டூர் துணை மின் நிலையம்: நாளை, காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கோவிந்தாபுரம் அமராவதி நகர் செக்போஸ்ட், பெரும்பள்ளம், சாயப்பட்டறை, மானுப்பட்டி, சைனிக் பள்ளி, கோவிந்தாபுரம், தும்பலபட்டி, ஆண்டிய கவுண்டனூர், ஆலாம்பாளையம், கரட்டுமேடு, எலையமுத்தூர், கிழவன் காட்டூர், குருவப்பா நாயக்கனூர், ஜக்கம்பாளையம், பெரிசனம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என உடுமலை மின்வாரியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!