உடுமலை வட்டாரத்தில் உழவர் திருநாள் விமரிசையாக கொண்டாட்டம்

உடுமலை வட்டாரத்தில் உழவர் திருநாள் விமரிசையாக கொண்டாட்டம்
X

உடுமலையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி நடைபெற்ற சிறப்பு பூஜை. 

உடுமலையில், உழவர் திருநாள் கொண்டாட்டம் விமரிசையாக நடந்தது.

தமிழர்களின் முக்கிய விழாவான, பொங்கல் பண்டிகையின் தொடர்ச்சியாக, உழவர் தினம் கொண்டாடப்பட்டது. உழவர்கள், உழவு ஓட்ட உதவும் காளை மாடுகளுக்கு படையலிட்டு, பூஜை செய்து வணங்கினர்.

அவ்வகையில், திருப்பூர் மாவட்டம் உடுமலை, அவினாசி பல்லடம் பகுதி விவசாய நிலங்களில், கால் நடைகளை கொண்டுவந்து குளிப்பாட்டி, அலங்கரிந்த்து, அவற்றை நிற்க வைத்தனர். பின்னர், கால் நடைகளையும், இறைவனையும் பூஜித்து வழிபட்டனர். அதிகளவில் விவசாயம் மேற்கொள்ளப்படும் தாராபுரம், பல்லடம், அவினாசி உள்ளிட்ட இடங்களிலும், விவசாயிகள் உழவர் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!