ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, பொள்ளாச்சி ரயில் பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை

ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, பொள்ளாச்சி ரயில் பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை
X

Tirupur News- பொள்ளாச்சி வழியாக இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரிக்கை 

Tirupur News- பொள்ளாச்சி வழியாக இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என, தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம், பொள்ளாச்சி ரயில் பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை மனு அளித்தது.

Tirupur News,Tirupur News Today- பொள்ளாச்சி ரயில் நிலையத்தை ஆய்வு செய்ய வந்த, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங்கை சந்தித்து பொள்ளாச்சி ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

உடுமலை வழியாக பொள்ளாச்சி - கோவை இடையே காலை மற்றும் மாலை இயக்கப்படும் ரயிலை வாரத்தின் அனைத்து நாட்களும் இரு திசைகளில் இருந்தும் இயக்க வேண்டும்.தற்போது கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு சனிக்கிழமை மாலை ரயில் இல்லை.பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு ஞாயிறு காலை ரயில் இல்லை. கோவை - மதுரை ரயில் கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு வர 58 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்கிறது. பொள்ளாச்சி - கோவை இடையே காலை மற்றும் மாலை இயக்கப்படும் ரயில் வேகத்தையும், மதுரை - கோவை - மதுரை ரயிலின் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும்.பொள்ளாச்சி - கோவை இடையே பயண நேரத்தை, 50 நிமிடங்களாக குறைக்க வேண்டும்.

பொள்ளாச்சி - மேட்டுப்பாளையம் இடையே நேரடி ரயில்கள் இயக்க வேண்டும். பொள்ளாச்சியில் இருந்து சென்னை எழும்பூர் அல்லது தாம்பரம் ஆகிய ஊர்களுக்கு பழநி, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் வழியாக வந்தே பாரத் அல்லது விரைவு ரயில்கள் தினமும் இயக்க வேண்டும்.பொள்ளாச்சி - பாலக்காடு வழித்தடத்தில் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும். எர்ணாகுளம் - பாலக்காடு மின்சார ரயிலை, பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டும்.பொள்ளாச்சி, பழநி, மதுரை வழியாக குருவாயூர் - ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும்.

பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் மீட்டர் கேஜ் காலங்களில் இருந்தது போன்று, ரயில் பராமரிப்பு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, இங்கு இருந்து நேரடியாக பல்வேறு இடங்களுக்கு ரயில்களை இயக்க வேண்டும்.பொள்ளாச்சி அல்லது கோவையில் இருந்து, காரைக்கால் அல்லது வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு பழநி, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை வழியாக விரைவு ரயில்களை இயக்க வேண்டும்.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொடுத்த மனுவில், பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு கல்வி, மருத்துவம், தொழில் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். இதற்காக, பொது போக்குவரத்துக்கு பஸ்சை பயன்படுத்துகின்றனர். எனவே பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு 6 முறை ரயில் விட வேண்டும்.

பொள்ளாச்சியில் இருந்து சென்னை செல்ல கோவை வழியாக ரயில் இயக்கிட வேண்டும். கேரளா துறைமுக நகரமான கொச்சியில் இருந்து தமிழக துறைமுக நகரமான துாத்துக்குடிக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும்.முன்பு இருந்துள்ள பாலக்காடு - பொள்ளாச்சி பயணிகள் ரயில் தினசரி இயக்க வேண்டும். கோவையை தலைமையிடமாகக்கொண்டு, பொள்ளாச்சி ரயில்வே நிலையத்தை உள்ளடக்கிய புது ரயில்வே கோட்டம் உருவாக்கிட வேண்டும்.

தமிழ்நாடு பனை, தென்னை தொழிலாளர் சங்கத்தினர் கொடுத்த மனுவில், குறைவான பெட்டிகளுடன் இயங்கி கொண்டு இருக்கும் பாலக்காடு - திருச்செந்தூர் ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும். மதுரை - கோவை - மதுரை இயக்கப்படும் ரயிலை, திருச்செந்தூர் வரை நீட்டிக்க வேண்டும். சென்னைக்கு அதிவிரைவு ரயில் இயக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil