உடுமலையில் பெட்ரோல் விலை ரூ.110ஐ நெருங்குகிறது!

உடுமலையில் பெட்ரோல் விலை  ரூ.110ஐ நெருங்குகிறது!
X
உடுமலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.109.83 ஆக இருந்தது.

உடுமலையில் உள்ள பெட்ரோல் பங்குகளில், ஒருலிட்டர் பெட்ரோல் விலை 109 ரூபாய் 83 பைசாவாக இருந்தது. கடந்த 13 நாட்களில் ஒரு லிட்டருக்கு 7 ரூபாய் 54 பைசா உயர்ந்துள்ளது.

இதேபோன்று டீசல் விலையும் தினசரி 75 பைசா உயர்ந்துவந்துள்ளது. நேற்று ஒரு லிட்டர் டீசல், 99 ரூபாய் 91 பைசாவாக இருந்தது. கடந்த, 13 நாட்களில் டீசல் விலை ஒரு லிட்டருக்கு 7 ரூபாய் 59 பைசா உயர்ந்துள்ளது

வாகன ஓட்டிகள் வேதனை

கொரோனா தொற்று தொடங்கியதற்கு பிறகு, இருசக்கர வாகனங்களில் பணிக்கு செல்கிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இருசக்கர வாகனம் வைத்துள்ளவர்கள் சிறிது தூரம் செல்வதென்றாலும் இருசக்கர வாகனத்தில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் பெட்ரோல் விலை உயர்ந்து வருவதால் இருசக்கர வாகன ஓட்டுனர்கள் அதிர்ச்சியும், மிகுந்த வேதனையுமடைந்துள்ளனர். அதே போன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அவற்றின் உரிமையாளர்களும் வேதனையடைந்துள்ளனர். இந்த நிலையில் பங்குகளுக்கு வரும் பெட்ரோல் மற்றும் டீசல் அளவு முன்பை விட குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!