உடுமலை அருகே குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

உடுமலை அருகே குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
X

Tirupur News-  சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள். 

Tirupur News- உடுமலை அருகே குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Tirupur News,Tirupur News Today- உடுமலை அருகே குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உடுமலை வட்டம், குடிமங்கலம் ஒன்றியம், மூங்கில்தொழுவு கிராமத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானோா் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா். இந்த ஊராட்சிக்கு உள்பட்ட கிராமங்களுக்கு திருமூா்த்தி மலை கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக இந்த கிராமத்துக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் குடிநீா் இன்றி பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வந்தனா். இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகளுக்கு பல முறை புகாா் அனுப்பியும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் பெதப்பம்பட்டி நால்ரோட்டில் காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். உடுமலை - செஞ்சேரிமலை சாலையையும், பொள்ளாச்சி - தாராபுரம் சாலையையும் மறித்து பொதுமக்கள் நின்றதால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதுகுறித்து தகவல் அறிந்த குடிமங்கலம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பொதுமக்களை சமாதானப்படுத்தினா். ஆனாலும் அது முடியாமல் போகவே ஒன்றிய அதிகாரிகள், குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆகியோா் பொதுமக்க ளிடம் பேச்சு வாா்த்தை நடத்தினா். இதில் குடிநீா் பிரச்னை க்கு விரைவில் தீா்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனா். இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!